காந்தவிண்மீனிலிருந்து வெளிவரும் அரிய மாபெரும் ஒளிக்கற்றை
April 30 , 2024 209 days 186 0
காந்தவிண்மீனிலிருந்து வெளிவரும் அரிய மாபெரும் ஒளிக்கற்றை எனப்படும் மிகத் தொலைதூரத்தில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றை அறிவியலாளர்கள் தற்போது கண்டறிந்து உள்ளனர்.
இந்த காந்தவிண்மீன் மெஸ்ஸியர் 82 அல்லது M82 எனப்படும் அண்டத்தில் உள்ளது.
இது காமா கதிர்களின் வெளிப்பாடானது, சுமார் 10,000 ஆண்டுகளில் நமது சூரியன் வெளியிடும் ஆற்றலின் அளவை ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்கு நேரத்தில் வெளியிட்டது.
M82 மாபெரும் ஒளிக்கற்றை வெளியீடு மிகவும் தொலைவில் நிகழ்ந்ததாக அறியப் பட்டது என்றாலும் மிகவும் ஆற்றல் வாய்ந்தது அல்ல.
2004 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட ஒன்று சூரியனிலிருந்து சுமார் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு வெளிவரும் ஆற்றலுக்குச் சமமான ஆற்றலைக் கொண்டிருந்தது.
காந்த விண்மீன்கள் பேரண்டத்தின் மிக தொலைதூரப் பொருட்களில் ஒன்றாகும்.
நியூட்ரான் நட்சத்திரங்கள் எனப்படும் சிறிய நட்சத்திர எச்சங்களின் ஒரு வகுப்பான அவை மிகவும் வலுவான காந்தப்புலங்களைக் கொண்டுள்ளன.
2004 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் நமது பால்வெளி அண்டத்தில் இரண்டு உறுதிப் படுத்தப்பட்ட மாபெரும் ஒளிக்கற்றைக்கள் மட்டுமே காணப்பட்டன.
இவற்றில் ஒன்று மட்டும் மற்றொரு விண்மீன் மண்டலத்தில், 1979 ஆம் ஆண்டில் பால் வெளியின் மிகவும் அண்டைப் பகுதியான பெரிய சீரற்ற பெருவிண்மீன் தொகுதியில் கண்டறியப் பட்டது.