TNPSC Thervupettagam
March 25 , 2021 1219 days 596 0
  • இந்திய அரசின் கலாச்சாரத் துறை அமைச்சகமானது 2020 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதிப் பரிசினை பங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மானிற்கு வழங்கியுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான பரிசு ஓமனின் சுல்தான் கபூஸ் பின் சையத் அல் சையத்திற்கு வழங்கப் பட்டுள்ளது.
  • ஷேக் முஜிபூர் ரஹ்மான் அவர்கள் வங்க தேசத்தின் முதல் குடியரசுத் தலைவர் மற்றும் முதல் பிரதம அமைச்சர் ஆவார்.
  • இவர் அந்நாட்டின் “தேசத் தந்தை” (அ) “முஜிப்” என அழைக்கப்பட்டார்.
  • 1975  ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இவர் படுகொலை செய்யப்பட்டார்.
  • இப்பரிசு இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு சர்வதேச காந்தி  அமைதிப் பரிசாகும்.
  • இவ்விருது 1995 ஆம் ஆண்டில் மோகன்தாஸ் காந்தியின் 125வது பிறந்தநாள் விழான்று தொடங்கப்பட்டது.
  • இவ்விருது இனம், தேசம், பாலினம் (அ) சமய நம்பிக்கை என எதையும் சாராமல் அனைத்து நபர்களுக்கும் வழங்கப்படக் கூடியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்