சமீபத்தில் துகள் உலோகம் மற்றும் புதிய பொருட்களுக்கான மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி மையத்தைச் (ARCI - Advanced Research Centre for Powder Metallurgy and New Materials) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய்க்குச் சிகிச்சையளிப்பதற்காக வேண்டி புவியை அடிப்படையாகக் கொண்ட ஒரு காந்தக் கலோரிப் பொருளை உருவாக்கியுள்ளனர்.
ARCI என்பது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் ஒரு தனிச்சுதந்திர ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாகும்.
காந்த கலோரிப் பொருட்கள் கட்டுப்படுத்தப்பட்ட வெப்பமயமாதலை அளிக்கின்றன.
இந்தப் பொருளைப் பயன்படுத்துவதன் மிக முக்கியமான நன்மை என்பது காந்தப் புலங்கள் நீக்கப்பட்டவுடன் இந்தக் கலன்கள் குளிர்ச்சியடையும்.