TNPSC Thervupettagam
November 28 , 2024 25 days 70 0
  • பூமியின் காந்த வட துருவம் ஆனது அதிவேகத்தில் ரஷ்யாவை நோக்கி நகர்கிறது.
  • கடந்த சில தசாப்தங்களாக அதன் வேகத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகி உள்ளது.
  • இது முன்பு மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது அதன் வேகம் ஆனது 1990 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 50-60 கிலோ மீட்டர்/ மணி ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தத் துருவமானது கனடாவில் இருந்து சைபீரியாவை நோக்கி தோராயமாக 2,250 கிலோமீட்டர்கள் நகர்ந்துள்ளது.
  • அனைத்து தீர்க்க ரேகைகளும் ஒன்றிணைகின்ற மிகவும் நிலையான புவியியல் வட துருவத்தைப் போலல்லாமல், காந்த வட துருவம் தொடர்ந்து மாறுகிறது.
  • தற்போதையப் போக்கு தொடர்ந்தால் அடுத்த பத்தாண்டுகளில் காந்த வட துருவம் 660 கிலோமீட்டர் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2040 ஆம் ஆண்டில், இது திசைகாட்டிகள் உண்மையான வடக்கிற்குப் பதிலாக சற்று கிழக்குப் புறமாக நோக்கி காட்டி உலகளாவிய வழி செலுத்துதலைப் பாதிக்கும்.
  • இந்த இயக்கங்கள் ஆனது, ஒவ்வொரு 3,00,000 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நிகழும் ஓர் இயற்கை சுழற்சியின் ஒரு பகுதியாகும் என்பதோடு கடைசி முழு துருவ மாற்றமானது 780,000 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்