TNPSC Thervupettagam

கானமயில் வளங்காப்பு – இராஜஸ்தான்

January 17 , 2025 5 days 64 0
  • இராஜஸ்தானில் உள்ள காடுகளில் ஒரே குழுவில் குறைந்தது 12 கானமயில்கள் (GIB) தென்பட்டுள்ளன.
  • வடக்கு மற்றும் மேற்கு இந்தியப் பகுதிகளில் "கோடவன்" மற்றும் "மால்தோக்" என்று  அழைக்கப் படும் இந்தப் பறவைகள், டெசர்ட்/பாலைவன தேசியப் பூங்காவில் (DNP) தென்பட்டுள்ளன.
  • GIB என்பது இராஜஸ்தானின் தார் பகுதியில் காணப்படும் மிக அருகி வரும் பறவை இனமாகும்.
  • இன்று, 173 பறவைகள் மட்டுமே எஞ்சியுள்ளன, அவற்றில் 128 பறவைகள் காடுகளில் காணப்படுகின்றன என்ற நிலையில் மீதமுள்ளவை உயிர்க் காப்பகங்களில் மட்டுமே வளர்க்கப் படுகின்றன.
  • இராஜஸ்தானைத் தவிர, குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவிலும் இந்தப் பறவை காணப்படுகிறது.
  • 2011 ஆம் ஆண்டில், இந்தப் பறவைகள் IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் "மிக அருகி வரும் நிலையில் உள்ள இனமாக" பட்டியலிடப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்