இந்திய வனவிலங்கு மையமானது GIB (Great Indian Bustard) பறவையின் வாழ்விடங்களில் செல்லும் அனைத்து மின் பகிர்மானத் தொடர்களையும் நிலத்துக்கு அடியில் அமைக்கப் பரிந்துரைத்துள்ளது.
GIB என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வாழும் ஒரு பறவை இனமாகும்.
GIB ஆனது இராஜஸ்தானின் மாநிலப் பறவையாக விளங்குகின்றது.
அதிக அளவிலான GIB பறவைகள் இராஜஸ்தானில் காணப்படுகின்றன.
GIB பறவையைப் பாதுகாக்கும் சரணாலயங்கள் பின்வருமாறு:
பாலைவன தேசியப் பூங்கா, இராஜஸ்தான்
கட்ச் கானமயில் சரணாலயம், குஜராத்
கான மயில் சரணாலயம் அல்லது ஜவஹர்லால் நேரு கானமயில் சரணாலயம், மகாராஷ்டிரா.