TNPSC Thervupettagam
July 28 , 2021 1090 days 561 0
  • குஜராத்திலுள்ள கட்ச் கானமயில் சரணாலயத்தில் கானமயில்கள் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • கட்ச் மாவட்டத்தின் அப்தசா வட்டாரத்திலுள்ள கட்ச் கானமயில் சரணாலயமானது 1992 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 2 சதுர கி.மீ. பரப்பளவே கொண்ட ஒரு சிறிய சரணாலயமாகும்.
  • ஆனால் 220 ச.கி.மீ. வரை பரவியுள்ள இதனுடைய சுற்றுச்சூழல் தாங்கு மண்டலப் பகுதியானது கானமயில்களின் இன்றைய வாழ்விடங்களின் பெரும்பாலான பகுதியாக உள்ளது.
  • கானமயிலானது இந்தியாவிலுள்ள கானமயில் என்ற நான்கு பெரிய பறவை இனங்களில் மிகவும் பெரிதானதாகும்.
  • மேக்குயின்ஸ் கானமயில், வரகுக் கோழி மற்றும் வங்காள வரகுக்கோழி ஆகியவை மற்ற மூன்று இனங்களாகும்.
  • உயர்நிலை மின் பரிமாற்றக் கம்பிகள் (Overhead power transmission lines) கான மயில்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

குறிப்பு

  • 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய இடங்களிலுள்ள கானமயில்களின் முக்கிய வாழ்விடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து உயர்நிலைப் மின்பரிமாற்றக் கம்பிகளும் நிலத்தடியில் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
  • மேலும் இந்த ஆணையை அமல்படுத்துவதற்கு மின் நிலைய நிறுவனங்களுக்கு உதவுவதற்காக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றையும் உச்ச நீதிமன்றம் அமைத்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்