TNPSC Thervupettagam

கான்பூர் - உலகின் மிகவும் மாசுபட்டுள்ள நகரம்

November 6 , 2019 1849 days 687 0
  • கின்னஸ் உலக சாதனைகளின் சமீபத்திய பதிப்பில் உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் நகரமானது உலகின் மிகவும் மாசுபட்டுள்ள நகரத்திற்கான பிரிவில்  இடம் பெற்றுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்ட (WHO - World Health Organization) ஒரு அறிக்கையின் படி, உலகில் மிகவும் மாசுபட்டுள்ள நகரம் வட இந்தியாவில் உள்ள கான்பூர் நகரம் ஆகும். இது 2016 ஆம் ஆண்டில் சராசரியாக 173 மைக்ரோகிராம் / மீ 3 என்ற நிலையில் PM2.5 அளவினைக்  கொண்டிருந்தது.
  • இந்த PM2.5 (Particulate Matter – நுண்மத் துகள்) நிலையானது WHO பரிந்துரைத்த 10 மைக்ரோகிராம் / மீ 3 என்ற அதிகபட்ச அளவை விட 17 மடங்கு அதிகமாகும்.
  • ‘கின்னஸ் உலக சாதனைகள் 2020’ என்ற புத்தகமானது ஆயிரக்கணக்கான புதிய சாதனைகளின் தலைப்புகளையும் அச்சாதனைகளை வைத்திருப்பவர்களையும் பட்டியலிடுகின்றது.
  • இது ஆண்டுதோறும் புத்தக வெளியீட்டாளரான பென்குயின் ரேண்டம் ஹவுஸ் என்ற பதிப்பகத்தால் வெளியிடப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்