"எக்ஸ் கான் குவெஸ்ட் 2023" எனப்படும் இந்தப் பன்னாட்டு அமைதி காப்புக் கூட்டுப் பயிற்சியில், 20 நாடுகளைச் சேர்ந்த இராணுவக் குழுக்கள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர்.
இந்திய இராணுவம் சார்பாக கர்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவு இதில் பங்கேற்றது.
14 நாட்கள் அளவிலான இந்தப் பயிற்சி மங்கோலிய நாட்டினால் நடத்தப் படுகிறது.
இது இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் நாடுகளின் இயங்குந் தன்மையை மேம்படுத்துதல், அவர்தம் அனுபவத்தைப் பகிர்தல் மற்றும் ஐக்கிய நாடுகளின் பல்வேறு அமைதி காப்பு நடவடிக்கைகளுக்காக (UNPKO) சீருடைப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டது.