TNPSC Thervupettagam

காபோனை (Gabon) - போலியோ அல்லாத நாடு

December 20 , 2017 2531 days 823 0
  • மத்திய ஆப்பிரிக்க நாட்டில் புதிதாக அறிவிக்கப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் தொற்றுகள் இல்லாத காரணத்தால் காபோனை (Gabon) போலியோ அல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்தது.
  • போலியோவானது முக்கியமாக இளம் குழந்தைகளை பாதிப்படையச் செய்து நிரந்தர பக்கவாதத்தைக் கூட ஏற்படுத்தும் அதிகளவில் ஏற்படும் தொற்றும் வைரஸ் நோயாகும்.
  • இதை குணப்படுத்துவதற்கு எந்த வழியும் இல்லை; நோய்த்தடுப்பு மருந்துகள் மூலமே இதனை வராமல் தடுக்க முடியும்.
  • உலகம் முழுவதும் 125 நாடுகளில் போலியோ பரவி இருந்த போதும் 3,50,000 பாதிப்புகள் பதியப்பட்ட போதும் 1988ல் இருந்து போலியோ சம்பந்தமான பாதிப்புகள் 99 சதவிகிதம் குறைந்துள்ளது.
  • தற்போது இந்தப் போலியோ நோயானது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் மட்டுமே உள்ளது. உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு நாட்டிலும் 2 பாதிப்புகள் வீதம் மொத்தம் 4 பாதிப்புகளை பதிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்