TNPSC Thervupettagam

காபோன் நாட்டின் புதிய அரசியலமைப்பு

November 24 , 2024 29 days 107 0
  • நாட்டின் இராணுவ ஆட்சியாளர்களால் முன்மொழியப் பட்ட ஒரு புதிய அரசியல் அமைப்பிற்கு காபோன் நாட்டு மக்கள் 91.8 சதவீத வாக்களித்து அங்கீகரித்துள்ளனர்.
  • முன்மொழியப் பட்டுள்ள இந்தப் புதிய அரசியலமைப்பு ஆனது அதிபர் பதவிக்கு இரண்டு முறை ஆட்சிக் கால வரம்பினை அறிமுகப்படுத்துகிறது.
  • இது அந்தப் பதவிக் காலத்தினை ஐந்து ஆண்டுகளில் இருந்து ஏழு ஆண்டுகளாக அதிகரிக்கிறது.
  • மத்திய ஆப்பிரிக்க நாட்டின் இந்தப் புதியதொரு அரசியலமைப்பு ஆனது பிரதமர் பதவியையும் நீக்குகிறது.
  • அதிபரைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் அந்தப் பதவிக்கு வர முடியாது என்பதையும் இது குறிப்பிடுகிறது.
  • முன்னாள் அதிபர் அலி போங்கோ ஒண்டிம்பாவை பதவி நீக்கம் செய்து 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இராணுவ அதிகாரிகள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்