TNPSC Thervupettagam

காமன்வெல்த்தின் கற்பதற்கான நல்லெண்ணத் தூதர்

February 14 , 2019 1994 days 552 0
  • கேரளாவின் வயதான மாணவியான 96 வயதுடைய கார்த்தியாயினி அம்மா காமன்வெல்த்தின் கற்பதற்கான நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
  • கடந்த காலங்களில் பள்ளிக் கல்வியைப் பெறாவிட்டாலும், கடந்த வருடம் கேரளாவின் அக்சரலக்ஷம் எழுத்தறிவுத் திட்டத்தில் 100-க்கு 98 மதிப்பெண்கள் அவர் பெற்றதோடு கேரள முதல்வரிடமிருந்து ஒரு நற்சான்றிதழையும் பெற்றார்.
  • காமன்வெல்த் கற்பித்தல் என்பது கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வான்கூவர் நகரைத் தலைமையகமாக கொண்ட காமன்வெல்த் என்ற ஒரு நாடுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
  • இது தனது 53 உறுப்பினர் நாடுகள் மத்தியில் தொலைதூரக் கல்வியையும் திறந்தவெளிக் கல்வியையும் ஊக்குவிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்