இங்கிலாந்து தலைநகர் இலண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளினுடைய அரசுத் தலைவர்கள் சந்திப்பில் (Commonwealth Heads of Government Meeting- CHOGM) இந்தியப் பிரதமரும் மற்ற காமன்வெல்த் நாடுகளின் பிற 52 அரசுத் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இச்சந்திப்பு நடத்தப்படுகின்றது.
நடப்பு பத்தாண்டுகளில் முதல் முறையாக இந்தியப் பிரதமர் ஒருவர் இச்சந்திப்பில் பங்கேற்றுள்ளார்.
இச்சந்திப்பின் கருப்பொருள் “பொதுவான எதிர் காலத்தை நோக்கி” (Towards a common future) என்பதாகும்.
4 முக்கிய விவகாரங்கள் மீது இச்சந்திப்பு நடத்தப்பட்டது. அவையாவன
தலைவர்களின் அறிக்கை (leaders' statement).
காமன்வெல்த் நீல சாசனம் (Commonwealth Blue Charter)
வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான நிரல்கள் (Agenda for Trade and Investment)
தேர்தல் கண்காணிப்பிற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் (Revised Guidelines for Election Observation).
காமன்வெல்த் அமைப்பு
சம இறையாண்மையுடைய நாடுகள் (equal sovereign states) மற்றும் 53 சுதந்திர நாடுகளின் தன்னார்வ சங்கமே (voluntary association) காமன்வெல்த் அமைப்பாகும். இந்த அமைப்பில் வளர்ந்த பொருளாதாரமுடைய மற்றும் வளரும் நாடுகளும் உள்ளன.
காமன்வெல்த் அமைப்பில் ஆப்ரிக்க கண்டத்தைச் சேர்ந்த 19 நாடுகளும், ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளும், கரிபியன் மற்றும் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த 13 நாடுகளும், ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த 3 நாடுகளும், 11 பசுபிக் பெருங்கடல் நாடுகளும் உள்ளன.
நவீன காமன்வெல்த் அமைப்பானது 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி அமைக்கப்பட்டது.
காமன்வெல்த் அமைப்பில் உறுப்பு நாடுகளின் நாட்டின் அளவு மற்றும் பொருளாதார வலிமையின் பொருட்டல்லாது அனைத்து நாடுகளும் சம அளவிலான அதிகாரத்தைக் கொண்டுள்ளன.
காமன்வெல்த் அமைப்பில் இணைந்த கடைசி நாடு ருவாண்டா ஆகும். இது 2009 ஆம் ஆண்டு காமன்வெல்த் அமைப்பில் இணைந்தது.