TNPSC Thervupettagam

காமன்வெல்த் தலைமை

May 1 , 2018 2400 days 766 0
  • காமன்வெல்த் கூட்டமைப்பில் (Commonwealth organization) உள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்து அரசியான எலிசபெத்திற்குப் பிறகு காமன்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக பிரிட்டன் இளவரசர் சார்லஸை ஏற்றுக் கொள்ள ஒத்துக் கொண்டுள்ளனர்.
  • இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் அரசுத் தலைவர்கள் சந்திப்பில் (Commonwealth Heads of Government Meeting) கலந்துகொண்ட அரசுத் தலைவர்களால் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மறைந்த தன் தந்தை ஆறாம் ஜார்ஜிடம் (George VI) இருந்து காமன்வெல்த் அமைப்பின் தலைவர் பொறுப்பைப் பெற்ற இங்கிலாந்து அரசியான எலிசபெத் ராணி 1952-ஆம் ஆண்டிலிருந்து காமன்வெல்த் அமைப்பின் தலைவராக உள்ளார்.
  • இருப்பினும் காமன்வெல்த் அமைப்பின் தலைவர் பதவி பரம்பரை மரபுவழிப் பட்டதல்ல (hereditary). காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவரை தேர்ந்தெடுப்பது இக்கூட்டமைப்பில் உள்ள 53 நாடுகளின் தலைவர்களைப் பொறுத்ததாகும்.
  • காமன்வெல்த் கூட்டமைப்பில் 53 நாடுகள் உள்ளன. பெரும்பாலும் இவை பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்டிருந்த முன்னாள் காலனியப் பகுதிகளாகும்.
  • இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை காமன்வெல்த் தலைவர்கள் மாநாடு நடத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்