காமன்வெல்த் நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது திங்கள் அன்று காமன்வெல்த் தினத்தை அனுசரிக்கிறது.
மொத்தம் 53 உறுப்பினர்கள் கொண்ட காமன்வெல்த் என்பது ருவாண்டா மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளுடன் முன்னாள் பிரிட்டீஷ் காலனியாதிக்கத்தைக் கொண்ட 52 அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு அமைப்பாகும்.
1973 ஆம் ஆண்டில் ராயல் காமன்வெல்த் மன்றம் அளித்த பரிந்துரையை அடுத்து, மார்ச் மாதத்தின் இரண்டாவது திங்கள் காமன்வெல்த் தினமாக காமன்வெல்த் செயலகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
1977 ஆம் ஆண்டு முதல், மார்ச் மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமை காமன்வெல்த் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
2019 ஆம் ஆண்டின் காமன்வெல்த் தினத்தின் கருத்துருவானது, “இணைக்கப்பட்ட காமன்வெல்த்” என்பதாகும்.