ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் நடைபெற்று வரும் மூத்தோருக்கான காமன்வெல்த் வாள்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற முறையில் A. பவானி தேவி வரலாறு படைத்தார்.
25 வயதான சென்னையைச் சேர்ந்தப் பெண்ணான இவர் இங்கிலாந்தின் எமிலி ரூவாக்ஸ் என்பவரை இறுதிப் போட்டியில் தோற்கடித்தார்.
இவர் முன்னதாக இவ்வருடம் ஐஸ்லாந்தில் நடைபெற்ற டூர்னாய் சேட்டிலைட் வாள்சண்டை சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.