TNPSC Thervupettagam

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2018

April 22 , 2018 2280 days 2371 0
  • 21-வது காமன்வெல்த் போட்டிகள் (Commonwealth Games) அண்மையில் ஆஸ்திரேலியா நாட்டின் கோல்டுகோஸ்ட் நகரில் (Gold Coast) நடைபெற்று முடிந்தது.
  • இந்த 21-வது காமன்வெல்த் போட்டியில் மொத்தம் 275 தங்கப் பதக்கங்களுக்கு 71 நாடுகளைச் சேர்ந்த 4,500க்கும் அதிகமான தடகள வீரர்கள் போட்டியிட்டனர்.
  • ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பதக்க போட்டிகளை ஒரே எண்ணிக்கையில் கொண்ட முதல் பெரும் அளவிலான பன்-விளையாட்டு போட்டி (Major multi-sport event) இதுவேயாகும்.
  • இந்த காமன்வெல்த் போட்டிக்கு 227 வீரர்களைக் கொண்ட அணியை இந்தியா அனுப்பி வைத்தது.
  • இந்த காமன்வெல்த் போட்டியின் துவக்க விழா கொண்டாட்டத்தில் இந்தியக் கொடியை பாட்மிண்டன் வீராங்கனையான  V. சிந்து ஏந்திச் சென்றார் (flag-bearer).
  • இந்த காமன்வெல்த் போட்டியில் 26 தங்கம், 20 வெள்ளி மற்றும் 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களை வென்று இந்தியா பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • 80 தங்கம், 59 வெள்ளி, 59 வெண்கலம் என மொத்தம் 198 பதக்கங்களை வென்று ஆஸ்திரேலியா பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • 45 தங்கம், 45 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 136 பதக்கங்களை வென்று இங்கிலாந்து பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

தங்கப் பதக்கம்   வென்றவர்கள்   –  விளையாட்டுப் போட்டிகள்

வீரரின் பெயர் விளையாட்டு
சாய்னா நேவால் பெண்கள் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டி
விகாஸ் கிருஷ்ணா குத்துச் சண்டை – 75 கிலோ எடைப் பிரிவு
மணிகா ·         பெண்களுக்கான ஒற்றையர் டேபுள் டென்னிஸ் போட்டி ·         காமன்வெல்த்தில் டேபுள் டென்னிஸ் போட்டி போட்டியில் தங்கம் வெல்லும் முதல் இந்தியப் பெண் இவராவார்.
வினேஷ் போகாட் மல்யுத்தம் – மகளிர் ப்ரீ ஸ்டைல் 50 கிலோ நார்டிக்  போட்டி
நீரஜ் சோப்ரா ·         ஈட்டி எறிதல் ·         காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ள முதல் இந்திய ஈட்டி எறிதல் வீரர் இவராவார்.
கவுரவ் சோலங்கி குத்துச் சண்டை – 52 கிலோ எடைப் பிரிவு
சுமித் மாலிக் மல்யுத்தம் – ஆண்களுக்கான பீரிஸ்டைல் 125 கிலோ எடைப் பிரிவு
சஞ்சீவ் ராஜ்புத் துப்பாக்கிச் சுடுதல் – 50 மீட்டர் ரைபிள் 3 நிலை சுடுதல் போட்டி. (3 Position shooting)
M.C மேரிகோம் ·         குத்துச் சண்டை – 45 முதல் 48 கிலோ வரையிலான எடைப் பிரிவு. ·         மேரிகோம் தன்னுடைய    முதல் காமன்வெல்த்  போட்டியான இப்போட்டியில் தங்கம்  வென்றுள்ளார்.
பஜ்ரங் பூனியா ·         மல்யுத்தம் – பீரி ஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவு
தேஜஸ்வினி சவந்த் துப்பாக்கி சுடுதல் – 50 மீட்டர் ரைபிள் சுடுதல் போட்டி
அனிஷ் பன்வாலா ·         துப்பாக்கிச் சுடுதல் – 25 மீட்டர் விரைவு பிஸ்டல் சுடுதல் போட்டி ·         காமன்வெல்த் போட்டியின் தங்கம் வென்ற இளைய  வீரர் இவராவார்
சுஷில் குமார் ·         மல்யுத்தம் – ஆண்களுக்கான பீரி  ஸ்டைல் 74 கிலோ எடைப் பிரிவு. ·         இவர் தனது மூன்றாவது தொடர்ச்சியான  காமன் வெல்த்  தங்கப் பதக்கத்தை  வென்றுள்ளார்
ராகுல் அவார் மல்யுத்தம் – ஆண்களுக்கான  பீரி ஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவு
ஸ்ரேயாஸி சிங் துப்பாக்கி சுடுதல்-டபுள் டிராப் மகளிர் துப்பாக்கி சுடுதல்
ஹீனா சித்து துப்பாக்கி சுடுதல் – 25 மீட்டர் பிஸ்டல் சுடுதல் போட்டி
ஜித்து ராய் துப்பாக்கி சுடுதல் – 10 மீட்டர் ஆண்களுக்கான ஏர் பிஸ்டல் போட்டி
மனு பெக்கர் துப்பாக்கி சுடுதல் – பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டி
பூனம் யாதவ் பளு தூக்குதல் – பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவு
வெங்கட் ராகுல் ரகாலா பளுதூக்குதல் – ஆண்களுக்கான 85 கிலோ  எடைப்பிரிவு
சதீஸ்குமார் சிவலிங்கம் பளுதூக்குதல் – ஆண்களுக்கான 77 கிலோ  எடைப்பிரிவு
சஞ்சிதா சானு பளு தூக்குதல் – பெண்களுக்கான 53 கிலோ  எடைப்பிரிவு
மீராபாய் சானு பளுதூக்குதல் – பெண்களுக்கான 48 கிலோ  எடைப்பிரிவு
  • இந்தியாவின் ஆண்கள் டேபுள் டென்னிஸ் அணி நைஜீரியாவை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளது.
  • பெண்கள் டேபுள் டென்னிஸ் போட்டியில் இந்திய டேபுள் டென்னிஸ் மகளிர் அணி முதல் முறையாக தங்கம் வென்றுள்ளது.
  • சத்விக் ரன்கி ரெட்டி மற்றும் அஸ்வினி பொன்னப்பா ஆகியோர் அடங்கிய கலப்பு இரட்டையர் பாட்மிண்டன் அணி இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

வெள்ளிப் பதக்கம் வென்றவர்கள்  - விளையாட்டுப் போட்டி

வீரரின் பெயர் விளையாட்டு
P.V. சிந்து பாட்மிண்டன் – பெண்கள் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டி இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவாலுக்கு எதிரான பதக்கம் வென்றார்.
கிடாம்பி ஸ்ரீகாந்த் பாட்மிண்டன் – ஆண்கள் ஒற்றையர் பிரிவு
தீபிகா பல்லிகல் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா பெண்கள் இரட்டையர் ஸ்குவாஷ் போட்டி
தீபிகா பல்லிக்கல் மற்றும் சவ்ரவ் கோஷல் கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டி
மணிஷ் கௌசிக் குத்துச் சண்டை – ஆண்களுக்கான  60 கிலோ  எடைப்பிரிவு
அமித் பங்கல் குத்துச் சண்டை – ஆண்களுக்கான   46-49 கிலோ எடைப்பிரிவு
மணிகா பத்ரா மற்றும் மவுமா தாஸ் டேபுள் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவு- காமன்வெல்த் போட்டியில் டேபுள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் முதல் வெள்ளிப் பதக்கம் இதுவாகும்
அஞ்சும் மவுட்கில் துப்பாக்கி சுடுதல் – பெண்களுக்கான  50மீட்டர் ரைபிள் 3 நிலை சுடுதல் பிரிவு
பூஜா தண்டா மல்யுத்தம் – பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு
மவுசம் கத்ரி மல்யுத்தம் – ஆண்களுக்கான 97 கிலோ எடைப் பிரிவு
சீமா பூனியா பெண்களுக்கான வட்டெறிதல்
மெகுலி கோஷ் துப்பாக்கி சுடுதல் – பெண்களுக்கான 10மீட்டர் ஏர்பிஸ்டல் போட்டி
ஹீனா சித்து துப்பாக்கி சுடுதல் – பெண்களுக்கான 10மீட்டர் ஏர்பிஸ்டல் போட்டி
P. குருராஜா பளுதூக்குதல் – ஆண்களுக்கான 56 கிலோ   எடைப்பிரிவு
தேஜஸ்வினி சாவந்த் துப்பாக்கி சுடுதல் – 50 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவு
பபிதா குமாரி மல்யுத்தம் – 53 கிலோ எடைப்பிரிவு

வெண்கலப் பதக்கம்  வென்றவர்கள்  - விளையாட்டுப் போட்டி

வீரரின் பெயர் விளையாட்டு
மணிகா பத்ரா மற்றும் G.சத்யன் கலப்பு இரட்டையர் – டேபுள் டென்னிஸ்
ஷரத் கமல் ஆண்களுக்கான  ஒற்றையர் – டேபுள் டென்னிஸ்
ஹர்மீத் தேசாய் மற்றும் சுனில் சங்கர் ஷெட்டி ஆண்களுக்கான இரட்டையர் டேபுள் டென்னிஸ் போட்டி
அஸ்வினி பொன்னப்பா மற்றும் சிக்கி ரெட்டி பெண்கள் இரட்டையர் டேபுள் டென்னிஸ் போட்டி
சோம்வீர் மல்யுத்தம் – ஆண்களுக்கான ப்ரீஸ்டைல் 86 கிலோ  எடைப்பிரிவு
சாக்சி மாலிக் மல்யுத்தம் – பெண்களுக்கான ப்ரீ ஸ்டைல்  62 கிலோ எடைப்பிரிவு
நமன் தன்வர் குத்துச் சண்டை- ஆண்களுக்கான 91 கிலோ  எடைப்பிரிவு
மனோஜ் குமார் குத்துச் சண்டை – ஆண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவு
ஹூசாமுதின் முகம்மது குத்துச் சண்டை- ஆண்குளுக்கான 56 கிலோ எடைப்பிரிவு
திவ்யா கக்ரன் மல்யுத்தம்–பெண்களுக்கான ப்ரீஸ்டைல்  68 கிலோ எடைப்பிரிவு
நவ்ஜித் தில்லான் பெண்களுக்கான வட்டெறிதல்
கிரண் மல்யுத்தம்  – பெண்களுக்கான 76 கிலோ பீரிஸ்டைல் எடைப்பிரிவு
அன்குர் மிட்டல் துப்பாக்கி சுடுதல் – ஆண்களுக்கான டபுள் டிராப் துப்பாக்கி  சுடுதல் போட்டி
ஓம் மிதர்வால் துப்பாக்கிச் சுடுதல்- 50 மீட்டர் ஆண்களுக்கான பிஸ்டல், 10 மீட்டர் ஆண்களுக்கான ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல்  போட்டி
அபூர்வி சண்டேலா துப்பாக்கி சுடுதல் – பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் சுடுதல் போட்டி.
விகாஸ் தாகூர் பளு தூக்குதல் – ஆண்களுக்கான 94 கிலோ  எடைப்பிரிவு
சச்சின் சௌத்ரி பாரா பவர்லிப்டிங்கில் ஆண்களுக்கான ஹெவிவெயிட் பிரிவு
ரவிகுமார் துப்பாக்கி சுடுதல் – ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் சுடுதல் போட்டி
தீபக் லதெர் பளுதூக்குதல் – ஆண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவு -  காமன்வெல்த் போட்டியில்  பதக்கம் வெல்லும் மிகவும் இளைய இந்திய பளுதூக்குதல் வீரர் இவராவார்.

காமன்வெல்த் போட்டிகளைப் பற்றி

  • காமன்வெல்த் நாடுகள் அமைப்பினுடைய (Commonwealth nations) 53 உறுப்பு நாடுகளிலிருந்து அவற்றின் தடகள வீரர்கள் பங்குபெறும் மிகப்பெரிய பன்-விளையாட்டு (multi-sport events) போட்டியே காமன்வெல்த் போட்டியாகும்.

  • முதல் காமன்வெல்த் போட்டியானது 1930 ஆம் ஆண்டு நடைபெற்றது.
  • நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை காமன்வெல்த் போட்டிகள் நடத்தப்படுகின்றன..
  • காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் கூட்டமைப்பானது (Commonwealth Games Federation-CGF) காமன்வெல்த்  போட்டிகளின் மேற்பார்வைக்கான முதன்மை நிறுவனமாகும்.
  • 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை இந்தியா காமன்வெல்த் போட்டியின் 19-வது பதிப்பை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
  • நியூஸிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான கூட்டமைப்பின்    பொதுக்குழு சந்திப்பில் 2022-ஆம் ஆண்டின் காமன்வெல்த் போட்டியை நடத்த தென்னாப்பிரிக்க நாட்டின்    டர்பன் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்