காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2022
August 3 , 2022
844 days
478
- டெல்லியின் அனாஹத் சிங், 2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறும் இளம் வயது (14) பேட்மிண்டன் வீரர் ஆவார்.
- ஆடவருக்கான 73 கிலோ எடைப் பிரிவு பளு தூக்குதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி (மேற்கு வங்கம்) தங்கப் பதக்கம் வென்றார்.
- பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளு தூக்குதல் இறுதிப் போட்டியில் மீராபாய் சானு (மணிப்பூர்) இந்திய அணிக்கான முதல் தங்கப் பதக்கத்தினை வென்றார்.
- ஆடவருக்கான 67 கிலோ எடைப் பிரிவில் ஜெர்மி லால்ரின்னுங்காவும் (மிசோரம்) தங்கம் வென்றார்.
- பளு தூக்குதல் போட்டியில், சங்கேத் மகாதேவ் சர்கார் (மகாராஷ்டிரா) இந்திய அணிக்கான முதல் வெள்ளிப் பதக்கத்தினை வென்றார்.
- பளு தூக்கும் போட்டியில் பிந்த்யாராணி தேவி (மணிப்பூர்) வெள்ளி வென்றார்.
- பெண்களுக்கான 71 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் (பஞ்சாப்) வெண்கலப் பதக்கம் வென்றார்.
- ஜூடோ போட்டியில் சுஷிலா தேவி லிக்மாபம் (மணிப்பூர்) வெள்ளிப் பதக்கமும், விஜய் குமார் (உத்தரப் பிரதேசம்) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
- பளுதூக்கும் வீரர் குருராஜா பூஜாரி (கர்நாடகா) வெண்கலப் பதக்கத்தினை வென்றார்.
Post Views:
478