TNPSC Thervupettagam

காமராஜர் துறைமுகத்தின் செயல்பாட்டுத் திறன்

January 1 , 2025 14 days 116 0
  • சென்னைத் துறைமுக அறக்கட்டளை மற்றும் அதன் துணை நிறுவனமான காமராஜர் துறைமுக லிமிடெட் ஆகியவை நடப்பு நிதியாண்டில் 100 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குப் போக்குவரத்து என்ற அளவினை தாண்டுவதை இலக்காக நிர்ணயித்துள்ளன.
  • காமராஜர் துறைமுகம் ஆனது, 2022-23 ஆம் ஆண்டில் 43.51 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டது.
  • இது முந்தைய ஆண்டில் பதிவான 38.74 மில்லியன் மெட்ரிக் டன்னில் இருந்து 12.31 சதவீதம் அதிகமாகும்.
  • காமராஜர் துறைமுகம் ஆனது 2021-22 ஆம் ஆண்டில் 1,35,702 அலகுகளை ஏற்றுமதி செய்துள்ள நிலையில், 2022-23 ஆம் ஆண்டில் 1,48,307 அலகுகளை ஏற்றுமதி செய்து உள்ளது.
  • இந்தத் துறைமுகத்தின் நிதி சார் செயல்பாடு 1,000 கோடி ரூபாயைத் தாண்டி அதன் வருமானம் 1,002.45 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
  • இது 2021-22 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 850.84 கோடி ரூபாயிலிருந்து 17.82 சதவீதம் அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்