TNPSC Thervupettagam

காயங்கள் மற்றும் வன்முறையைத் தடுத்தல் : ஒரு கண்ணோட்டம்

December 15 , 2022 581 days 316 0
  • காயங்கள் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மேம்பாடு குறித்த 14வது உலக மாநாடு ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.
  • உலக சுகாதார நிறுவனமானது, “காயங்கள் மற்றும் வன்முறையைத் தடுத்தல் : ஒரு கண்ணோட்டம்” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
  • 2019 ஆம் ஆண்டில் பதிவான 4.4 மில்லியன் காயங்கள் சார்ந்த இறப்புகளில், தற்செயலாக ஏற்பட்ட காயங்களால் 3.16 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளையும், வன்முறை தொடர்பாக ஏற்பட்ட காயங்கள் 1.25 மில்லியன் இறப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.
  • இவற்றில் மூன்றில் ஒரு நபர் சாலைப் போக்குவரத்து சார்ந்த விபத்துகளால் இறந்தவர்கள் ஆவர்.
  • 6 இறப்புகளில் ஒருவர் தற்கொலையினாலும், 9 இறப்புகளில் ஒன்று கொலைகள் மூலமாகவும், 61 இறப்புகளில் ஒன்று போர் மற்றும் மோதல்களினாலும் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
  • 5 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் பதிவான இறப்புகளுக்கான முதல் 5 காரணங்களில் சாலைப் போக்குவரத்து விபத்துகள் தொடர்பாக ஏற்பட்ட காயங்கள், கொலை மற்றும் தற்கொலை ஆகியவை பெரும்பங்கு வகிக்கின்றன.
  • 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் மரணத்திற்கு சாலைப் போக்குவரத்து தொடர்பான காயங்களே முக்கியக் காரணமாகும்.
  • 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பிற்கு சாலைப் போக்குவரத்து தொடர்பான காயங்கள் இரண்டாவது முக்கியக் காரணமாகும்.
  • 5 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்திற்கு நீரில் மூழ்கி உயிரிழத்தல் 6வது முக்கியக் காரணமாகும்.
  • காயங்கள் மற்றும் வன்முறைகளால், ஒவ்வோர் ஆண்டும் ஆண்கள் பெண்களை விட இரண்டு மடங்கு அதிகமான அளவில் இறப்பினை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளனர்.
  • பெண்கள் இறப்பதற்கான முக்கியக் காரணங்கள் என்பவை சாலைப் போக்குவரத்து தொடர்பான காயங்கள், தவறி விழுதல் மற்றும் தற்கொலைகள் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்