TNPSC Thervupettagam

காரகோரம் முரண்பாடு

July 26 , 2022 726 days 773 0
  • உலகெங்கிலும் அதிக அளவிலான பனிப்பாறைகள் உருகி குறைந்து வருகின்றன.
  • ஆனால் இமயமலையில் மத்திய காரகோரத்தின் பனிப்பாறைகள் கடந்த சில தசாப்தங்களில் வியக்கத் தக்க வகையில் எந்த வகையிலும் மாறாமல் அல்லது சிறிதளவு மட்டுமே அதிகரித்து உள்ளன.
  • இந்த நிகழ்வானது, பனிப்பாறை நிபுணர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதோடு மட்டுமல்லாமல் பருவநிலை மாற்றத்திற்கான மனிதக் காரணங்களை மறுக்கச் செய்பவர்களுக்கு மிகவும் அரிதான ஒரு உண்மையைப் புரிய வைக்க உதவுகிறது.
  • இந்த மாற்றம் மிகவும் ஒரு சிறியப் பிராந்தியத்தில் மட்டுமே காணப்படுவதால் இது மிகவும் விசித்திரமானதாக கருதப்படுகிறது.
  • குன்லூன் மலைத் தொடரானது இமயமலை முழுவதிலும் இதே போன்ற நிகழ்வுகள் இருப்பதைக் குறிப்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும்.
  • 21 ஆம் நூற்றாண்டின் ஒரு தொடக்கக் காலத்திலிருந்து காரகோரம் மலையின் ஒழுங்கின்மையைத் தூண்டுவதற்கும் அந்த நிலையைத் தொடர்ந்து நிலை நிறுத்துவதற்கும் மேற்கத்தியப் புயல்காற்றுகள் ஒரு செயற்கருவியாக இருந்ததாகச் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்