காரீஃப் பருவப் பயிர்க்கான முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகள்
November 13 , 2024 12 days 60 0
2024-25 ஆம் ஆண்டின் காரீஃப் பயிர் பருவத்தில் இந்தியாவின் அரிசி உற்பத்தி ஆனது சாதனை அளவான 119.93 மில்லியன் டன்னை (MT) எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரிசி உற்பத்தியானது, முந்தைய ஆண்டு காரீஃப் பருவத்தை விட 6.67 மில்லியன் டன் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பருமணி தானியங்களில், 2024-25 ஆம் ஆண்டு காரீஃப் பருவத்தில் (ஜூலை-ஜூன்) மக்காச்சோள உற்பத்தியானது இதுவரை இல்லாத அளவிற்கு 24.54 மெட்ரிக் டன்னாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் இது கடந்த ஆண்டு 22.24 மெட்ரிக் டன்னாக இருந்தது.
சோள உற்பத்தியானது, 2.19 மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டுள்ள நிலைமையில் கம்பு உற்பத்தி 9.37 மெட்ரிக் டன்னாக குறையும்.
முந்தைய ஆண்டில் சுமார் 56.93 மில்லியன் டன் அளவாக இருந்த மொத்தப் பருமணி தானியங்களின் உற்பத்தியானது இந்த ஆண்டில் 37.81 மெட்ரிக் டன்னாகக் குறைந்து உள்ளது.
2024-25 ஆம் ஆண்டின் காரீஃப் பயிர் பருவத்தில் மொத்த உணவு தானிய உற்பத்தி சுமார் 164.70 மெட்ரிக் டன் ஆக இருக்கும் என வேளாண் அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு பதிவான 155.76 மெட்ரிக் டன்னை விட அதிகமாகும்.