TNPSC Thervupettagam

காரீஃப் பருவப் பயிர்க்கான முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகள்

November 13 , 2024 12 days 59 0
  • 2024-25 ஆம் ஆண்டின் காரீஃப் பயிர் பருவத்தில் இந்தியாவின் அரிசி உற்பத்தி ஆனது சாதனை அளவான 119.93 மில்லியன் டன்னை (MT) எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • அரிசி உற்பத்தியானது, முந்தைய ஆண்டு காரீஃப் பருவத்தை விட 6.67 மில்லியன் டன் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • பருமணி தானியங்களில், 2024-25 ஆம் ஆண்டு காரீஃப் பருவத்தில் (ஜூலை-ஜூன்) மக்காச்சோள உற்பத்தியானது இதுவரை இல்லாத அளவிற்கு 24.54 மெட்ரிக் டன்னாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் இது கடந்த ஆண்டு 22.24 மெட்ரிக் டன்னாக இருந்தது.
  • சோள உற்பத்தியானது, 2.19 மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டுள்ள நிலைமையில் கம்பு உற்பத்தி 9.37 மெட்ரிக் டன்னாக குறையும்.
  • முந்தைய ஆண்டில் சுமார் 56.93 மில்லியன் டன் அளவாக இருந்த மொத்தப் பருமணி தானியங்களின் உற்பத்தியானது இந்த ஆண்டில் 37.81 மெட்ரிக் டன்னாகக் குறைந்து உள்ளது.
  • 2024-25 ஆம் ஆண்டின் காரீஃப் பயிர் பருவத்தில் மொத்த உணவு தானிய உற்பத்தி சுமார் 164.70 மெட்ரிக் டன் ஆக இருக்கும் என வேளாண் அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.
  • இது கடந்த ஆண்டு பதிவான 155.76 மெட்ரிக் டன்னை விட அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்