கார்கில் தினம் / கார்கில் விஜய் தீவாஸ்என்பதுஇந்திய ராணுவத்தின் விஜய்நடவடிக்கையின் (Operation Vijay) வெற்றியை பறைசாற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் (26 ஜூலை 1999 அன்று) பாகிஸ்தான் ஊடுருவாளர்களிடம் இழந்த, உயர்மட்ட புறக்காவல் அரண்களை இந்தியா கைப்பற்றியது .
கார்கில் போர் 60 நாட்களுக்கு மேல் நீடித்து, 26 ஜூலை அன்று முடிவடைந்தது. இருபுறமும் பெரும் உயிரிழப்புகள் நேர்ந்த இப்போரின் இறுதியில் ,கார்கில் உடைமைகளை இந்தியா மீண்டும் கைப்பற்றியது.
கார்கில் போர் வீரர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 ஆம் தேதியன்று, கார்கில் விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது.
இந்த நாள் கார்கில் - த்ராஸ் துறை (Kargil - Dras sector),மற்றும் தேசியத் தலைநகரான புது தில்லியில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும்,“இந்தியா கேட்” பகுதியில் அமைந்துள்ள அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில், போரில் மறைந்த வீரர்களுக்கு இந்தியப் பிரதமர் மரியாதை செலுத்துவார்.