TNPSC Thervupettagam

கார்பன் எல்லை இணக்க முறைமை

November 7 , 2023 383 days 267 0
  • இறக்குமதிகள் மீது கார்பன் வரி விதிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்மொழிதல் ஆனது, அதன் உற்பத்தித் துறைக்கு ஒரு “பெரிய சேதம்” ஆக மாறக் கூடிய ஒரு ‘தவறான’ நடவடிக்கையாகும்.
  • இது ஆரம்பத்தில் இரும்பு மற்றும் எஃகு, சிமெண்ட், அலுமினியம், உரங்கள் மற்றும் மின்சார ஆற்றல் உற்பத்தி ஆகியவற்றின் மீது விதிக்கப்படும்.
  • இந்திய அரசு தனது சொந்தக் கார்பன் வரியை விதிப்பதன் மூலம் இந்த நடவடிக்கைக்கான எதிர் நடவடிக்கையினை மேற்கொள்ளும்.
  • அதிக கார்பன் பொருட்கள் மீது உள்நாட்டு வரிகளை விதித்து, அதன் மூலம் திரட்டப் படும் வருவாயினை பசுமை ஆற்றல் மாற்றத்திற்குப் பயன்படுத்தும் உத்தியை இந்தியா பரிசீலித்து வருகிறது.
  • இந்த அணுகுமுறையானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதி மீதான கார்பன் வரியைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்