சீனா தனது தேசிய கார்பன் உமிழ்வு வர்த்தகச் சந்தையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப் படுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உமிழ்வு வர்த்தகத் திட்டத்திற்கு மாற்றாக சீனாவின் உமிழ்வு வர்த்தகத் திட்டமானது உலகின் மிகப்பெரிய உமிழ்வு வர்த்தக அமைப்பாக மாறியுள்ளது.
ஒரு கார்பன் சந்தை என்பது பசுமைக்குடில் வாயுவினை உமிழ்பவர்கள் பசுமைக் குடில் வாயு உமிழ்வு அனுமதி அல்லது கொடுப்பனவுகளை அதில் வாங்கலாம் மற்றும் விற்கலாம்.
முதல் கட்டத்தில், இந்த அமைப்பானது மின் துறையை மட்டுமே உள்ளடக்குகிறது.
இரும்பு மற்றும் எஃகு மற்றும் கட்டுமானப் பொருட்கள் உட்பட மேலும் ஏழு அதிக ஆற்றல் கொண்ட துறைகள் எதிர்காலத்தில் கார்பன் சந்தைக்குள் வரும்.
முதன்முறையாக, தேசிய அளவில் பசுமைக்குடில் வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு நிறுவனங்களின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது.