TNPSC Thervupettagam

கார்பன் சேகரிப்பில் ஆல்காக்களின் பங்கு

December 21 , 2023 211 days 232 0
  • ஜோத்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் புதுமையான தொழில் நுட்பம் ஆனது, கார்பன் டை ஆக்சைடைப் பிடிப்பதற்கும், கழிவுநீரைச் சுத்திகரித்து மின்சாரத்தை உருவாக்குவதற்கும் பாசிக்களின் (ஆல்கா) துணையுடன் இயங்கும் எரிபொருள் கலங்களைப் பயன்படுத்துகிறது.
  • கனல் வாயுக்களை பாசி நிறைந்த குளங்களில் குமிழிகளாக்குதல் என்ற வழக்கமான செயல் முறையுடன் ஒப்பிடும்போது, அவற்றின் மறைமுக உயிர்வேதியியல் செயல் முறை மிகவும் செயல் திறன் மிக்கதாக உள்ளது.
  • இது கார்பன் டை ஆக்சைடை கார்பனேட்டுகளாக மாற்றுவதோடு, நீரில் உள்ள கனிம கார்பனின் கரைதிறனை அதிகரிக்கிறது, இதனால் இது நீரில் கார்பன் தக்க வைப்புத் திறனை அதிகரிக்கிறது.
  • இந்தத் திறந்த குளங்கள் சார்ந்த செயல்முறைகளை விட ஒளிசார் உயிரி உலைகள் போன்ற முழுவதும் மூடப்பட்ட அமைப்புகளின் பயன்பாடு விரும்பத் தக்கதாக கூறப் படுகிறது.
  • அவை பைகார்பனேட்டுகள் CO2 ஆக சிதைவதைத் தடுப்பத்தோடு, அதன் pH அளவைப் பேணுகின்றன.
  • கூடுதலாக, இந்தத் தொழில்நுட்பம் ஆனது கழிவுநீரைப் பயன்படுத்துவதோடு, இது கழிவு நீர்நிலை போன்ற நிலைமைகளில் செழித்து வளரும் திறன் கொண்ட ஒரு வெப்ப நிலை தாங்கும் ஆல்கா திரிபினை (குளோரெல்லா வல்காரிஸ்) பயன்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்