April 18 , 2023
589 days
256
- தமிழக அரசானது ராஜபாளையம் மற்றும் ராமேஸ்வரத்தைக் கார்பன் நடுநிலை மையங்களாக மாற்றுவதற்காக தேர்வு செய்துள்ளது.
- இராஜபாளையம் என்பது மூலோபாய ரீதியாக மேற்குத் தொடர்ச்சி மலையின் அடி வாரத்திலும் பாதுகாக்கப்பட்ட காடுகளுடனும் அமைந்துள்ளது.
- இது மேல் வைப்பார் ஆற்றுப் படுகையின் முக்கியமான நீர்ப்பிடிப்புப் பகுதியாகும்.
- ஆன்மிகத் தலமான ராமேஸ்வரத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கானச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
- கார்பன்-நடுநிலையை அடைய, அரசாங்கம் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது.
- ஈரமான கழிவுகளைப் பதப்படுத்த உயிரி-சிஎன்ஜி ஆலைகளை நிறுவுதல்,
- நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் மூலம் குறைந்த உமிழ்வு வாழ்க்கை முறையை ஊக்குவித்தல்,
- உயிரிச் சுரங்கம் மூலம் திரட்டப்பட்டக் கழிவுகளை அகற்றுதல், மற்றும்
- குறைந்த உமிழ்வு கொண்டப் போக்குவரத்து அமைப்புகளை அதிகரித்தல்.
- காடு வளர்ப்பு மூலம் கார்பன் மடுவை அதிகரிக்க இது பணி புரிகிறது.
- இது கடலுக்குள் செல்லும் நெகிழிகளின் அளவைக் குறைக்கும் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தச் செய்கிறது.
Post Views:
256