TNPSC Thervupettagam

கார்பன் நடுநிலை மையங்கள்

April 18 , 2023 460 days 210 0
  • தமிழக அரசானது ராஜபாளையம் மற்றும் ராமேஸ்வரத்தைக் கார்பன் நடுநிலை மையங்களாக மாற்றுவதற்காக தேர்வு செய்துள்ளது.
  • இராஜபாளையம் என்பது மூலோபாய ரீதியாக மேற்குத் தொடர்ச்சி மலையின் அடி வாரத்திலும் பாதுகாக்கப்பட்ட காடுகளுடனும்  அமைந்துள்ளது.
  • இது மேல் வைப்பார் ஆற்றுப் படுகையின் முக்கியமான நீர்ப்பிடிப்புப் பகுதியாகும்.
  • ஆன்மிகத் தலமான ராமேஸ்வரத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கானச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
  • கார்பன்-நடுநிலையை அடைய, அரசாங்கம் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது.
    • ஈரமான கழிவுகளைப் பதப்படுத்த உயிரி-சிஎன்ஜி ஆலைகளை நிறுவுதல்,
    • நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் மூலம் குறைந்த உமிழ்வு வாழ்க்கை முறையை ஊக்குவித்தல்,
    • உயிரிச் சுரங்கம்  மூலம் திரட்டப்பட்டக் கழிவுகளை அகற்றுதல், மற்றும்
    • குறைந்த உமிழ்வு கொண்டப் போக்குவரத்து அமைப்புகளை அதிகரித்தல்.
  • காடு வளர்ப்பு மூலம் கார்பன் மடுவை அதிகரிக்க  இது பணி புரிகிறது.
  • இது கடலுக்குள் செல்லும் நெகிழிகளின் அளவைக் குறைக்கும் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தச் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்