TNPSC Thervupettagam

கார்பன் நுண்கதிர்கள்

November 7 , 2023 256 days 230 0
  • மும்பையின் இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆனது, சூரிய ஒளியை வெப்ப ஆற்றலாக மாற்றக் கூடிய கார்பன் நுண்கதிர்களை உருவாக்கியுள்ளது.
  • கார்பன் நுண்கதிர்கள் என்பது ஒரு தனித்துவமான பூங்கொத்து போன்ற உருவ அமைப்பில் கட்டமைக்கப்பட்ட கார்பன் அணுக்களால் ஆன ஒரு தனித்துவமான நுண் கட்டமைப்பு ஆகும்.
  • இந்த நுண்கதிர்கள் அகச்சிவப்பு, புலப்படும் ஒளி மற்றும் புற ஊதா உள்ளிட்ட பல்வேறு அதிர்வெண்களில் ஒளியை உட்கிரகித்து, சூரிய ஒளியை வெப்ப ஆற்றலாக மாற்றுவதில் அதிக திறன் கொண்டவை.
  • மேலும், அவற்றின் தனித்துவமான வடிவமைப்பானது குறைந்தபட்ச ஒளி பிரதிபலிப்பு மற்றும் செயல் திறன் மிக்க வெப்பத் தக்க வைப்புத் திறனை உறுதி செய்கிறது.
  • இது சூழலியல் ரீதியாக நீடித்த வெப்பத்தை வழங்கக் கூடியதோடு, இது கட்டுமானம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாத்தியமானப் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்