TNPSC Thervupettagam

கார்பன் பிடிப்பிற்கு சுரங்கத் துகள் பயன்பாடு

October 29 , 2024 25 days 83 0
  • டார்ஜிலிங்கில் அமைந்துள்ள ஆல்ட் கார்பன் நிறுவனம் ஆனது, சுரங்கத் துகள்களைப் பருவநிலைக்கு உகந்த தீர்வாக மாற்றியமைத்துள்ளது.
  • இது வளிமண்டலக் கார்பன் டை ஆக்சைடை (CO2) எதிர்கொள்ள மேம்படுத்தப்பட்டப் பாறை உடைப்பு எனப்படும் புவி-வேதியியல் செயல்முறையைப் பயன்படுத்துகிறது.
  • ஒரு கரிம உரமாக இருப்பதால், பசால்டிக் (தூசி) துகள் ஆனது மண்ணை வளப்படுத்தச் செய்வதோடு, கார்பன் பிடிப்புகளைத் துரிதப்படுத்துகிறது.
  • இரண்டு முதல் நான்கு ஆண்டுகளில், ஒரு டன் வளிமண்டலக் கார்பனைப் பிடிப்பதற்கு சுமார் 3-4 டன் பசால்ட் தூசுகள் தேவைப்படுகிறது.
  • கார்பன் பிடிப்பு என்பது வளிமண்டல CO2 வாயுவினை பற்றி சேமிக்கும் செயல்முறை ஆகும்.
  • பெருங்கடல்கள் முக்கிய கார்பன் பிடிப்புப் பகுதிகள் ஆகும் என்ற நிலையில் அவை மனித நடவடிக்கைகளில் இருந்து வெளியேறும் 30% அளவிலான CO2 வாயுவினைப் பற்றுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்