TNPSC Thervupettagam

கார்பன் வரம்பு வரி

November 23 , 2022 606 days 299 0
  • ஐரோப்பிய ஒன்றியமானது, BASIC அமைப்பின் உறுப்பினர் நாடுகள் எதிர்த்து வரும் கார்பன் வரம்பு சீரமைவு செயல்முறை என்ற கொள்கையை முன்மொழிந்துள்ளது.
  • கார்பன் வரம்பு சீரமைவு செயல்முறை (CBAM) என்பது அதிக கார்பன் கொண்ட பொருட்களின் இறக்குமதிகளால் வெளியாகும் கார்பன் கசிவினைத் தடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.
  • இதன் கீழ், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது, அவற்றை உற்பத்தி செய்ய செலவிடப்படும் கார்பன் அளவின் அடிப்படையில் வரி விதிக்கப்படும்.
  • வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு இடையே நிலவும் சந்தை களத்தினைச் சமன் செய்வதற்காக இறக்குமதிகளுக்கு சமமானச் செலவினமானது வரியாக விதிக்கப்படுகிறது.
  • BASIC என்பது பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நான்கு புதிதாக தொழில்மயமாக்கப் பட்ட நாடுகளின் குழுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்