பருவநிலை மாறுபாட்டிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் ஓர் முயற்சியாக பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை (green House Gas Emission) குறைப்பதற்கு 2019 ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர் அரசு “கார்பன் வரியை” (Carbon tax) விதிக்க உள்ளது.
2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஒரு டன் பசுமை இல்ல வாயு உமிழ்விற்கு 5 சிங்கப்பூர் டாலர்கள் (அதாவது81 அமெரிக்க டாலர்) விதிக்கப்பட உள்ளது.
ஆண்டிற்கு 25,000 டன் அல்லது அதற்கு மேலான அளவு பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை உண்டாக்கும் சாதனங்கள் மீது இந்த வரி விதிக்கப்பட உள்ளது.
சிங்கப்பூரின் சிறிய நிலப்பரப்பு மற்றும் அதிகமான மக்கள் தொகை அடர்த்தி காரணமாக அண்மையில் வெளியிடப்பட்டுள்ள சர்வதேச ஆற்றல் நிறுவனத்தின் (International Energy Agency) தரவின் படி, பசுமை இல்ல வாயுக்களின் தனிமனித வெளியீட்டின் (Per Capita Emission) அடிப்படையில் 142 நாடுகளுள் சிங்கப்பூர் 26-வது இடத்தில் உள்ளது.