TNPSC Thervupettagam

கார்பன் வெளிக் கொணர்தல் திட்டம்

January 22 , 2020 1642 days 590 0
  • கார்பன் வெளிக் கொணர்தல் திட்டம் என்பது பல்வேறு நாடுகள் மற்றும் அந்த நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் கார்பன் குறைப்பு நடவடிக்கைகள் குறித்து வெளியிடப்படும் ஒரு வருடாந்திர அறிக்கை ஆகும்.
  • இது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான குளோபல் ரிப்போர்டிங் என்ற நிறுவனத்தின் முன்முயற்சியினால் (Global Reporting Initiative) வெளியிடப்பட்டது.
  • இந்த அறிக்கையின் படி, கார்பன் குறைப்பு தொடர்பான பெருநிறுவனப் பொறுப்புகளின் அடிப்படையில் நாடுகள் தரவரிசைப் படுத்தப்பட்டன.
  • இந்திய நிறுவனங்களிடையே, இன்போசிஸ், டால்மியா சிமெண்ட் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் 100% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நுகர்வை மேற்கொண்டுள்ளன.
  • இந்தப் பட்டியலில் 135 நிறுவனங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
  • இந்தப் பட்டியலில் அமெரிக்காவைத் தொடர்ந்து ஜப்பான் 83 நிறுவனங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • இந்தப் பட்டியலில் மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை முறையே முறையே ஐக்கிய ராஜ்ஜியம் (78), பிரான்சு (51), இந்தியா (38) ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்