TNPSC Thervupettagam

காற்றாலைத் திட்டங்களுக்கான மீளுருவாக்கக் கொள்கை

January 8 , 2024 193 days 357 0
  • தமிழக மாநில அரசானது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ‘காற்றாலை மின் ஆற்றல் உற்பத்தி திட்டங்களுக்கான தமிழ்நாடு மீளுருவாக்க மற்றும் செயல்பாட்டுக் கால நீட்டிப்புக் கொள்கையை’ வெளியிட்டது.
  • இந்தப் புதிய கொள்கை அறிமுகப் படுத்தப்பட்டதன் மூலம், காற்றாலை ஆற்றல் உற்பத்தித் துறையில், குஜராத்திடம் இழந்த தனது முன்னணி நிலையை தமிழக மாநிலம் மீண்டும் பெற உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி குஜராத்தில் உள்ள நிறுவப்பட்ட காற்றாலை ஆற்றல் திறன் 11,176.12 மெகாவாட் ஆகும்.
  • தமிழ்நாட்டில் உள்ள நிறுவப்பட்ட காற்றாலை ஆற்றல் திறன் 10,377.97 மெகாவாட்டாக இருந்தது.
  • மீளுருவாக்கத் திட்டத்தின் கீழ், காற்றாலை ஆற்றல் உற்பத்தி நிறுவனங்கள் பழைய காற்றாலைகளுக்குப் பதிலாக புதியவற்றை நிறுவ உள்ளன.
  • இந்தியாவின் மொத்த காற்றாலை ஆற்றல் மீளுருவாக்கத் திறன் ஆனது 25,406 மெகா வாட்டாக உள்ள நிலையில் இதில் அதிகபட்சமாக தமிழகத்தின் பங்கு 7,387 மெகா வாட்டாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்