காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தின் தற்போதைய காற்றாலை மின் உற்பத்தித் திறன் 8,507 மெகாவாட் ஆகும்.
இந்தியாவின் மொத்த காற்றாலை மின் உற்பத்தித் திறனில் தமிழகத்தின் பங்கு 23 சதவீதமாகும்.
2022 ஆம் ஆண்டுக்குள் 1 லட்சத்து 75 ஆயிரம் மெகாவாட் திறன்களும்2030 ஆம் ஆண்டுக்குள் 4 லட்சத்து 50 ஆயிரம் மெகாவாட் திறன்களும் கொண்ட மரபுசாரா எரிசக்தி மூலங்களை உருவாக்க மத்திய மின் அமைச்சகத்தால் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, 2022 ஆம் ஆண்டுக்குள் 22,000 மெகாவாட்டை எட்ட தமிழகத்திற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.