TNPSC Thervupettagam

காற்றுப் பதனாக்கிகளைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் 

April 30 , 2020 1545 days 588 0
  • மத்தியப் பொதுப் பணித் துறையானது கோவிட் – 19 நோய் தொற்றின் போது காற்றுப் பதனாக்கிகளைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.
  • இந்த வழிகாட்டுதல்கள் சூடாக்கும், உறை பதனம் செய்யும் மற்றும் காற்றுப் பதனாக்கிப் பொறியாளர்களின் இந்தியச் சமூகத்தினால் (ISHRAE -  Indian Society of Heating, Refrigerating and Air Conditioner Engineers) தயாரிக்கப் பட்டுள்ளது. 
  • இந்த வழிகாட்டுதல்களின் முக்கிய நோக்கம் காற்றுப் பதனாக்கிகளைப் பயன்படுத்துவதன் மூலம் கோவிட் – 19 நோய்த் தொற்றுப் பரவல் அதிகரிப்பதை தடுப்பதாகும்.
  • சீர்மை வெப்ப நிலையானது 24 டிகிரி செல்சியஸ் மற்றும் 30 டிகிரி செல்சியஷிற்கு இடைப்பட்ட அளவில் இருக்க வேண்டும்.
  • ஒப்பு ஈரப்பதமானது 40% மற்றும் 70%ற்கு இடைப்பட்ட அளவில் இருக்க வேண்டும்.
  • காற்றுவெளியில் நேர்மறை அழுத்தத்தைப் பராமரிக்கும் பொருட்டு, இயந்திர வெளியேற்றக் காற்றானது தூய்மைக் காற்று அளவில் 70% - 80% அளவில் இருக்க வேண்டும்.
  • இந்திய அரசானது ஒவ்வொரு காற்றுப் பதனாக்கிகளுக்கும் அதன் குறைந்தபட்ச வெப்பநிலையானது தொடக்க நிலை அளவான 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்க வேண்டும் என்று ஏற்கெனவே ஒரு உத்தரவினைப் பிறப்பித்திருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்