TNPSC Thervupettagam

காற்று மாசுபாடு ஆய்வு-2017

November 15 , 2017 2594 days 1039 0
  • அண்மையில் வெளியிடப்பட்ட “இந்திய மாநிலங்களின் சுகாதாரம் மற்றும் மாநிலங்கள் அளவிலான நோய்சுமை” அறிக்கையின் படி, நாடு முழுவதும், காற்று மாசுபாடுகளால் உண்டாகும் நோய்களினால் விளையும் மரணங்கள் மற்றும் குறைபாடுகள் 17 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • இந்த ஆய்வறிக்கை “லான்செட் “ மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது 2016-ல் உண்டான உயர் காற்று மாசுபாட்டு அளவால், பெருமளவில் இறப்புகளும், ஆரோக்கியமின்மைகளும் ஹரியானா, டெல்லி, பஞ்சாப், பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஏற்பட்டிருப்பதை முன்னிலைப்படுத்திக் காட்டுகின்றது.
  • ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட், மஹாராஷ்டிரா, ஒடிஸா போன்ற மாநிலங்களில் குறைந்த அளவிலான காற்று மாசுபாட்டின் பதிவை இந்த அறிக்கை சுட்டுகின்றது.
  • இந்த அறிக்கையின்படி, 1990 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் பிறப்பின் போதான ஆயுள் எதிர்பார்ப்பு அல்லது சராசரி வாழ்நாள் ஆயுட்காலம் (life expectancy at birth)  ஆண்கள் மற்றும்  பெண்கள்   இருபாலருக்கும்  கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
  • 1970-ல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முறையே 59.7 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டுகள் என இருந்த சராசரி வாழ்நாள் ஆயுட்காலம்   2016-ல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு  முறையே 70.3 ஆண்டுகள் மற்றும்  66.9 ஆண்டுகள் என உயர்ந்துள்ளது.
  • இந்த ஆய்வறிக்கையின் படி, நாட்டின் மிக ஆரோக்கியமான மாநிலமாக கேரளா உள்ளது. இங்கு சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 8  ஆண்டுகளாகவும், பெண்களுக்கு 78.7 ஆண்டுகளாகவும் உள்ளது.
  • இது தேசிய சராசரி வாழ்நாள் ஆயுட்காலத்தை விட 8  ஆண்டுகள் அதிகமாகும்.
  • இந்தியாவின் தேசிய சராசரி வாழ்நாள் ஆயுட்காலம் 70 .3  ஆண்டுகள் ஆகும்.
  • இந்தியாவின் மாநிலங்கள் அளவிலான நோய் சுமை முன்னெடுப்பானது  பின்வரும் அமைப்புகளினுடைய  கூட்டிணைவுகளின் தொடக்கமாகும்.
    • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (Indian Medical Research Council-ICMR
    • இந்திய பொது சுகாதார அறக்கட்டளை (PHFI – Public Health Foundation of India)
    • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தோடு கூட்டிணைவுடைய சுகாதார அளவீடு மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (Institute for Health Metrics and Evaluation – IHME)
    • இந்திய அரசோடு இணைந்து 100 இந்திய நிறுவனங்களை சேர்ந்த பங்கெடுப்பாளர்கள் மற்றும் நிபுணர்கள் குழு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்