அண்மையில் வெளியிடப்பட்ட “இந்திய மாநிலங்களின் சுகாதாரம் மற்றும் மாநிலங்கள் அளவிலான நோய்சுமை” அறிக்கையின் படி, நாடு முழுவதும், காற்று மாசுபாடுகளால் உண்டாகும் நோய்களினால் விளையும் மரணங்கள் மற்றும் குறைபாடுகள் 17 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த ஆய்வறிக்கை “லான்செட் “ மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது 2016-ல் உண்டான உயர் காற்று மாசுபாட்டு அளவால், பெருமளவில் இறப்புகளும், ஆரோக்கியமின்மைகளும் ஹரியானா, டெல்லி, பஞ்சாப், பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஏற்பட்டிருப்பதை முன்னிலைப்படுத்திக் காட்டுகின்றது.
ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட், மஹாராஷ்டிரா, ஒடிஸா போன்ற மாநிலங்களில் குறைந்த அளவிலான காற்று மாசுபாட்டின் பதிவை இந்த அறிக்கை சுட்டுகின்றது.
இந்த அறிக்கையின்படி, 1990 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் பிறப்பின் போதான ஆயுள் எதிர்பார்ப்பு அல்லது சராசரி வாழ்நாள் ஆயுட்காலம் (life expectancy at birth) ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
1970-ல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முறையே 59.7 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டுகள் என இருந்த சராசரி வாழ்நாள் ஆயுட்காலம் 2016-ல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முறையே 70.3 ஆண்டுகள் மற்றும் 66.9 ஆண்டுகள் என உயர்ந்துள்ளது.
இந்த ஆய்வறிக்கையின் படி, நாட்டின் மிக ஆரோக்கியமான மாநிலமாக கேரளா உள்ளது. இங்கு சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 8 ஆண்டுகளாகவும், பெண்களுக்கு 78.7 ஆண்டுகளாகவும் உள்ளது.
இது தேசிய சராசரி வாழ்நாள் ஆயுட்காலத்தை விட 8 ஆண்டுகள் அதிகமாகும்.
இந்தியாவின் தேசிய சராசரி வாழ்நாள் ஆயுட்காலம் 70 .3 ஆண்டுகள் ஆகும்.
இந்தியாவின் மாநிலங்கள் அளவிலான நோய் சுமை முன்னெடுப்பானது பின்வரும் அமைப்புகளினுடைய கூட்டிணைவுகளின் தொடக்கமாகும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (Indian Medical Research Council-ICMR
இந்திய பொது சுகாதார அறக்கட்டளை (PHFI – Public Health Foundation of India)
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தோடு கூட்டிணைவுடைய சுகாதார அளவீடு மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (Institute for Health Metrics and Evaluation – IHME)
இந்திய அரசோடு இணைந்து 100 இந்திய நிறுவனங்களை சேர்ந்த பங்கெடுப்பாளர்கள் மற்றும் நிபுணர்கள் குழு.