TNPSC Thervupettagam

காற்று மாசுபாடு மற்றும் ஆயுட் காலம்

September 3 , 2023 323 days 215 0
  • நுண்ணிய துகள் பரவலால் ஏற்படும் காற்று மாசுபாடு (PM2.5) ஒரு சராசரி இந்தியரின் ஆயுட்காலத்தை 5.3 ஆண்டுகள் குறைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள், வருடாந்திர சராசரி நுண்ணிய துகள் மாசு அளவு உலக சுகாதார அமைப்பின் வரம்பினை மீறிக் காணப்படும் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்றனர்.
  • சுமார் 67.4 சதவீத மக்கள், நாட்டின் தேசியக் காற்றுத் தர அளவான 40 µg/m3 என்ற வரம்பினைத் தாண்டிய பகுதிகளில் வாழ்கின்றனர்.
  • நாட்டின் தேசிய சுற்றுப்புறக் காற்றின் தரத் தரநிலைகள் (40 µg/m3) பூர்த்தி செய்யப் படா விட்டால், டெல்லியில் வாழும் மக்கள் தங்களது ஆயுட்காலத்தில் 8.5 ஆண்டுகள் வரை இழக்க நேரிடும்.
  • 1998 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில், சராசரி வருடாந்திர நுண்ணிய துகள் மாசுபாடு 67.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • இது சராசரி ஆயுட்காலத்தை மேலும் 2.3 ஆண்டுகள் குறைக்கிறது.
  • தெற்காசியாவில் 2013 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான ஒரு காலக் கட்டத்தில் நுண்ணிய துகள் மாசுபாடு 9.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • இந்தியாவில், PM2.5 மாசுபாடு அளவுகள் 9.5 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், இது பாகிஸ்தானில் 8.8 சதவீதமாகவும் வங்காளதேசத்தில், 12.4 ஆகவும் உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்