TNPSC Thervupettagam

காற்று மாசுபாடு மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய்

November 5 , 2023 259 days 178 0
  • சர்வதேச இதழ்களில் வெளியிடப்பட்ட இரண்டு ஆய்வுகள் ஆனது, சென்னை மற்றும் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டிற்கும் இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து அறிக்கையளித்துள்ளன.
  • மக்களுக்கான மோசமான காற்று உள்ள இடங்களின் பட்டியல்களில் இந்திய நகரங்கள் தொடர்ந்து முன்னணியில் உள்ளன.
  • நகரங்களின் காற்றின் தரம் ஆனது உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த வரம்புகளை கடந்து அடிக்கடி பல மடங்கு அதிகரிக்கிறது.
  • ஒவ்வொரு மாதமும் PM2.5 அளவுகளில் ஏற்படும் ஒரு கனமீட்டரில் 10 மைக்ரோகிராம் (μg/m3) என்ற அதிகரிப்பினால், உணவுக்கு முன் எடுத்த சோதனையில் பிளாஸ்மா குளுக்கோஸ் அளவானது (FPG) 0.21-0.58 mg/dL (ஒரு டெசிலிட்டருக்கு மில்லிகிராம்கள்) மற்றும் கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின் அளவானது (HbA1c) 0.012-0.024 அதிகரித்துள்ளது.
  • சென்னையில் FPG அளவுகள் 0.36-1.39 mg/dL ஆகவும், HbA1c அளவுகள் 0.01-0.06 ஆகவும் அதிகரித்துள்ளது.
  • ஆறு மாதங்களில், PM2.5 அளவுகளில் ஏற்பட்ட 10 μg/m3 அதிகரிப்பு ஆனது டெல்லியில் இந்த இரண்டு அளவுகளின் வரம்புகளையும் இரட்டிப்பாக்கியது.
  • ஆனால் சென்னையில் பதிவான பல்வேறு முடிவுகளுடன் புள்ளியியல் ரீதியாக இதனை தொடர்புபடுத்த முடியவில்லை.
  • வருடாந்திர சராசரியில் “PM2.5” என்ற அளவானது இரண்டாம் வகை நீரிழிவு நோய் வருவதற்கான 9 முதல் 36% வரையிலான அதிக ஆபத்து நிலையுடன் தொடர்பு உடையதாக இருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்