மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் காற்று மாசுபாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக “ஹவா ஆனா தி” என்ற பாடலை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 05 அன்று “உலக சுற்றுச்சூழல் தினம்” கொண்டாடப்படவிருக்கும் நிலையில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
தேசியத் தூய்மைக் காற்றுத் திட்டம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தினால் 102 நகரங்களில் PM 2.5 மற்றும் PM 10 அளவிலான மாசுக்களை 20 – 30 சதவிகிதம் வரை குறைக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
84 நகரங்கள், தங்களது வரைவு செயல் திட்டங்களைச் சமர்ப்பித்துள்ளன.