டெல்லியின் தேசியத் தலைநகரப் பிராந்திய அரசாங்கம் ஆனது, காற்று மாசு பிரச்சினையை சமாளிப்பதற்காக நகரத்தில் செயற்கை மழையினை உருவாக்கச் செய்வதற்கான தனது திட்டங்களை அறிவித்துள்ளது.
இது மழைப்பொழிவை அதிகரிப்பதன் மூலம் காற்று மாசுபடுத்திகளை அகற்றி, ஒரு குறிப்பிட்ட பகுதியில் மாசு அளவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த புதுமையான அணுகுமுறையானது, கான்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் சமர்ப்பித்த விரிவான திட்டத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஒரு நாடு மேக விதைப்புச் சோதனையை இதற்காக மேற்கொள்வது இது முதல் முறை அல்ல.
முன்னதாக, சீனா தனது வறண்ட பகுதிகளுக்கு அதிக மழைப்பொழிவைக் கொண்டு வருவதற்காக இரசாயனத் தண்டுகளை வானில் தூவியது.
அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளும் இந்த முறையை மேம்படுத்தி வரும் நாடுகளில் சிலவாகும்.