TNPSC Thervupettagam

காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022

August 26 , 2022 825 days 1907 0
  • 2022 ஆம் ஆண்டின் ‘தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கையினை’ தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்.
  • இந்தக் கொள்கையானது, 2025 ஆம் ஆண்டிற்குள் தோல் துறையில் ரூ.20,000 கோடி முதலீட்டை உள்வாங்கி, 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இராணிப்பேட்டையின் பனப்பாக்கத்தில் மாபெரும் காலணி உற்பத்திப் பூங்காவினை நிறுவுவதற்கான அடிக்கல்லினையும் முதல்வர் அவர்கள் நாட்டினார்.
  • காலணி உற்பத்திப் பிரிவின் தேசிய உற்பத்தி மதிப்பில் 26 சதவீதப் பங்களிப்பையும், தேசிய ஏற்றுமதியில் 48 சதவீதத்தையும் தமிழ்நாடு மாநிலம் வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்