TNPSC Thervupettagam

காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவன சட்டம் 2017 (Footwear Design & Development Institute Act-2017)

October 18 , 2017 2596 days 870 0
  • இந்த சட்டத்தின் விதிமுறைகள் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக (INI-Institute Of National Importance) உருவாக்குவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ளன.
  • இந்த காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இவ்வாறு அறிவிக்கப்பட்ட பிறகு, தொழிற்துறையின் தேவைக்கேற்ற வகையில் தனது பயிற்சி படிப்புகளை வடிவமைப்பதற்கும் தமது பிரத்தியேகமான பட்டத்தை மாணவர்களுக்கு அளிப்பதற்கும் அந்நிறுவனம் தன்னாட்சி அதிகாரங்கள் கொண்டுள்ளது.
  • காலணி, தோல்பொருட்கள் மற்றும் அது சார்ந்த துறையில் ஒரே குடையின் கீழ் வசதிகளை தரும் அமைப்பு என்ற வகையில் இந்த நிறுவனம் ஒரு புகழ்பெற்ற நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்