TNPSC Thervupettagam

காலநிலைச் சேவைகளின் நிலை அறிக்கை - 2020

October 19 , 2020 1370 days 658 0
  • உலக வானிலை அமைப்பானது காலநிலைச் சேவைகள் 2020 என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • அக்டோபர் 13 அன்று பேரிடர் அபாயக் குறைப்புக்கான பன்னாட்டு நாளை முன்னிட்டு இது வெளியிடப் பட்டது.

சிறப்பம்சங்கள்

  • மூன்று பேரில் ஒருவர் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு முறைகளால் (Early warning systems) போதுமான பாதுகாப்புடன் இல்லை.
  • கடந்த 50 ஆண்டுகளில், 11,000க்கும் மேற்பட்ட பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் இவை வானிலை, காலநிலை மற்றும் நீர் தொடர்பான ஆபத்துகளை ஏற்படுத்தி உள்ளன.
  • இதில் 2 மில்லியன் உயிரிழப்புகள் மற்றும் 3.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இழப்புகள் உள்ளடங்கும்.
  • 2030 ஆம் ஆண்டு வாக்கில் பன்னாட்டு மனிதாபிமான முறையை (international humanitarian system) எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை ஒரு ஆண்டுக்கு சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 50% அதிகரிக்கும்.

உலக வானிலை அமைப்பு

  • இந்த அமைப்பானது 1873 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பன்னாட்டு வானிலை அமைப்பின் (International Meteorological Organization) கீழ் நிறுவப்பட்டது.
  • 1947 ஆம் ஆண்டின் உலக வானிலை ஒப்பந்தமானது முறையாக உலக வானிலை அமைப்பை நிறுவியது.
  • உலக வானிலை அமைப்பானது 193 நாடுகள் மற்றும் பிரதேசங்களை உள்ளடக்கியதாகும். மேலும் இது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.
  • இது வளிமண்டல அறிவியல், நீர்நிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் தொடர்பான பன்னாட்டு ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் பொறுப்பை உடையது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்