இந்த மாநாடானது பாரிஸ் ஒப்பந்தத்தின் 5வது ஆண்டைக் குறிப்பதற்காக ஐக்கிய நாடுகள், பிரான்சு மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகியவற்றினால் இணைந்து நடத்தப் பட்டது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைவர் காலநிலைச் சமநிலையை அடையும் வரை உறுப்பு நாடுகள் “காலநிலை அவசரச் சூழ்நிலையை” அறிவிக்குமாறு அந்நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனானது உலகில் 4வது மிகப் பெரியது என்றும் அது 2022 ஆம் ஆண்டில் 175 ஜிகாவாட் அளவை எட்டும் என்றும் இந்தியப் பிரதமர் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் இந்தியாவானது 2030 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனானது 45 ஜிகாவாட் என்ற அளவை எட்ட அதிக அளவிலான குறிக்கோள்களைக் கொண்டுள்ளது என்றும் அறிவித்துள்ளார்.
இந்தியாவானது பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை அடையும் வகையில் செயல்பட்டு வருகின்றது.
இந்தியாவானது தனது கார்பன் உமிழ்வு தீவிரத் தன்மையை 2005 ஆம் ஆண்டில் இருந்த நிலையை விட 21% என்ற அளவில் குறைந்துள்ளது.