TNPSC Thervupettagam

காலநிலை மாற்றத் தளம்

April 13 , 2021 1197 days 557 0
  • பாதுகாப்பு மற்றும் காலநிலை சார்ந்த நடவடிக்கைகளுக்காக நிதி வழங்குதல் பற்றி ஏழை நாடுகளுக்கு அறிவுரை வழங்குவதற்கான தளம் ஒன்றினை உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) தொடங்கியுள்ளது.
  • இந்த இரு நிதி நிறுவனங்களும் ஏழை நாடுகளின் கடன் சுமையைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தையில் காலநிலை மாற்றம் எனும் காரணியை முன்னெடுக்க இத்தளத்தினை உபயோகிக்கும்.
  • உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி இரு உலகளாவியப் பிரச்சினைகள் உள்ளன.
  • அவையாவன
    • ஏழை நாடுகளின் அதிக கடன் சுமையை மறுசீரமைத்தல் (அ) குறைப்பதற்கான தேவை.
    • காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் புதைபடிவ எரிபொருள்களின் மாசு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான தேவை.
  • எனவே, காலநிலை மாற்றத்தை கடன் மறுசீரமைப்புச் செயல்பாடுகளில் சேர்ப்பது இவற்றைக் குறைப்பதற்கு ஊக்கமளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்