காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு (IPCC) பருவநிலை மாற்றம் மற்றும் நிலம் மீதான சிறப்பு அறிக்கையை வெளியிட்டது.
மனிதப் பயன்பாடு நேரடியாக 70% (69-76%) பனிக்கட்டி இல்லாத உலகளாவிய நிலப் பரப்பைப் பாதிக்கிறது.
தற்போதைய தீவிர விவசாய முறை மண் சிதைவு மற்றும் நிலையான இழப்புகளுக்கு வழி வகுத்தது.
அடுத்த 50 ஆண்டுகளுக்குக் கூட உலகிற்கு உணவளிக்கப் போதுமான மண் வளம் இல்லை.
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, வளிமண்டலக் கார்பன் டை ஆக்சைடு அளவுகள் ஆண்டுக்கு மில்லியனுக்கு 1.3 பாகங்களாக உயர்ந்து வருவது பதிவு செய்யப் பட்டு உள்ளது.
இது முந்தைய 100 ஆண்டுகளை விட நான்கு மடங்கு வேகமாகவும் கடந்த 5,000 ஆண்டுகளை விட 400 மடங்கு வேகமாகவும் உள்ளது.
நமது உணவின் சுற்றுச்சூழலின் தாக்கம் பற்றிய நமது அறிவு அதிகரித்துள்ள போதிலும், 1998 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் உலகளாவிய இறைச்சி நுகர்வு 58% அதிகரித்துள்ளது.
தாவர எண்ணெய் நுகர்வு 2013 ஆம் ஆண்டில் இருந்து சுமார் 30% அதிகரித்துள்ளது.
2008 ஆம் ஆண்டிலிருந்து உலகளவில் அரிசி நுகர்வு 17% அதிகரித்துள்ள நிலையில் கோதுமை நுகர்வு 6% உயர்ந்துள்ளது.