இயற்கைக் காலநிலை மாற்றம் என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, காலநிலை மாற்றமானது வாழைப் பழங்களின் வளர்ச்சி நிலைகளுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்தப் போக்கு தலைகீழாக மாற இருக்கின்றது. காலநிலை மாற்றம் 2050 ஆம் ஆண்டில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
வாழைப் பழங்கள் வெப்பமான காலநிலையில் செழித்து வளர்கின்றன. பழம் சார்ந்த பயிர்களின் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோராக இந்தியா விளங்குகின்றது.
தேசிய தோட்டக் கலை வாரியமானது 2011-17 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் (34 டன்/ஹெக்டேர்) வாழைப் பழத்தின் தொடர்ச்சியான மற்றும் அதிகப்படியான மகசூலைப் பதிவு செய்துள்ளது.